பார்வோனின் தேர்களில் பூட்டப்பட்ட பெண் குதிரைக்கு ஒப்பிடுகிறேன்.
10காதணிகள் தொங்கும் உன் கன்னங்களும்,
நகைகள் அணிந்த உன் கழுத்தும் அழகானவை.
11நாங்கள் உனக்கு வெள்ளிப் பதிக்கப்பட்ட
தங்கக் காதணிகளைச் செய்வோம்.
காதலி
12அரசர் தமது பந்தியில் இருக்கையிலே
எனது வாசனைத் தைலம் நறுமணம் வீசியது.
13என் காதலர் எனக்கு என் மார்பகங்களுக்கிடையில் இருக்கும்
வெள்ளைப்போள முடிச்சாய் இருக்கிறார்.
14என் காதலர் எனக்கு என்கேதி ஊர் திராட்சைத் தோட்டங்களில் உள்ள,
மருதாணி பூங்கொத்து போன்றவர்.
காதலன்
15என் அன்பே, நீ எவ்வளவு அழகானவள்!
ஆ, நீ எவ்வளவு அழகானவள்!
உன் கண்கள் புறாக்கண்கள்.
காதலி
16என் காதலரே, நீர் எவ்வளவு அழகானவர்!
ஆ, எவ்வளவு கவர்ச்சி!
நமது படுக்கை பசுமையானது.
காதலன்
17நம் வீட்டின் விட்டங்கள் கேதுரு மரத்தாலானவை,
நம்முடைய மச்சு தேவதாரு மரத்தாலானவை.
Notes
*1:11:2 முக்கிய ஆண் மற்றும் பெண் பேச்சாளர்கள் (தொடர்புடைய எபிரெய வடிவங்களின் பாலினத்தின் அடிப்படையில் முதன்மையாக அடையாளம் காணப்பட்டது) காதலன் மற்றும் காதலி என்ற முறையான தலைப்புகளால் குறிக்கப்படுகின்றன. மற்றவர்களின் வார்த்தைகள் தோழியர் என்று குறிக்கப்பட்டுள்ளன. சில நிகழ்வுகளில் பிரிவுகளும் அவைகளின் தலைப்புகளும் விவாதத்திற்குரியவை.
†1:51:5 அரேபியாவுடன் தொடர்புடைய இஸ்மயேல் பழங்குடியினரில் கேதரும் ஒருவர். இவர்கள் பொதுவாக கருப்பு கூடாரங்களில் வாழ்ந்தனர். இது இளம்பெண்ணின் கருப்பு தோலைக் குறிக்கிறது
§1:141:14 என்கேதி என்பது சவக்கடலின் தென்மேற்கு கரையில் ஒரு சோலை; இது ஒரு புத்துணர்ச்சியூட்டும் மற்றும் வளமான இடமாக அறியப்படுகிறது, ஏனெனில் இது ஒரு நீரூற்று மூலம் பாய்கிறது
1:2 முக்கிய ஆண் மற்றும் பெண் பேச்சாளர்கள் (தொடர்புடைய எபிரெய வடிவங்களின் பாலினத்தின் அடிப்படையில் முதன்மையாக அடையாளம் காணப்பட்டது) காதலன் மற்றும் காதலி என்ற முறையான தலைப்புகளால் குறிக்கப்படுகின்றன. மற்றவர்களின் வார்த்தைகள் தோழியர் என்று குறிக்கப்பட்டுள்ளன. சில நிகழ்வுகளில் பிரிவுகளும் அவைகளின் தலைப்புகளும் விவாதத்திற்குரியவை.
1:5 அரேபியாவுடன் தொடர்புடைய இஸ்மயேல் பழங்குடியினரில் கேதரும் ஒருவர். இவர்கள் பொதுவாக கருப்பு கூடாரங்களில் வாழ்ந்தனர். இது இளம்பெண்ணின் கருப்பு தோலைக் குறிக்கிறது
1:5 சாலொமோனின் அல்லது சல்மா.
1:6 சகோதரர்கள் அல்லது என் தாயின் மகன்கள்.
1:6 திராட்சைத் தோட்டம் இளம்பெண்ணைக் குறிக்கிறது. இந்த உருவகம் அவளது உடல் தோற்றத்தை கவனித்துக்கொள்வதற்கான அவளது திறனைக் குறிக்கிறது.
1:7 முகத்திரையிட்ட பெண்போல் அல்லது அலைந்து திரிகிறவள் எனப்படும்.
1:12 பந்தியில் அல்லது படுக்கையில்.
1:14 என்கேதி என்பது சவக்கடலின் தென்மேற்கு கரையில் ஒரு சோலை; இது ஒரு புத்துணர்ச்சியூட்டும் மற்றும் வளமான இடமாக அறியப்படுகிறது, ஏனெனில் இது ஒரு நீரூற்று மூலம் பாய்கிறது